வியாழன், அக்டோபர் 07, 2010

ரம்மியமான ஒரு காலை

ஈரமான காலை. ஆழ் அமைதி. உயரமான அலுவலக கட்டடத்தின் உச்சியில் ஒரு வெள்ளை வல்லூறின் அகவல். புதிதாக இருந்தது.
Dogs
நேற்று இரவு முழுதும் பெய்த பலத்த மழையில் ஒதுங்க இடமின்றி, எங்கள் அலுவலக வாசற்படியில் மிதியடியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்த அழகான நாய்க்குட்டிகள். ஒன்று வெள்ளை நிறம். இன்னொன்று கருமை.

வித்தியாசமான ரம்மியமான இனிய காலை இன்று விடிந்தது!

செவ்வாய், அக்டோபர் 05, 2010

மாஸ்கோவின் காவிரியில் ஒரு வசனம்

"நிறுத்துங்க.. நிறுத்துங்க...அவரையும் ஏத்திக்கலாம்". டேக்சியில் ஒரு பெரியவரை இரு இளைஞர்கள் ஏற்றிக்கொள்கின்றனர்.

"ஏண்டாப்பா என்ன படிக்கிற?"

"தாத்தா.. நான் படிச்சு முடிச்சிட்டேன். engineer"

"அப்படியா... நல்லது... இந்த ஊர்ல ஒரு குளம் கட்டு... கால் கழுவ கூட தண்ணி இல்ல.. வெளியூர்ல இருந்துதான் கொண்டு வர வேண்டியிருக்கு"

"தாத்தா.. அது என்னால முடியாது... "

"அப்ப எதுக்குப்பா இந்த engineer வேல?"

"நாங்கல்லாம் foreign company-ல வேலை பாக்குறோம்"

"அப்ப அது நமக்கு ஒதவாத வேலையா?"

"இல்ல தாத்தா.. அவரு மாசம் லச்சக் கணக்குல சம்பளம் வாங்குறாரு"

கோபமாக "தண்ணி இல்லாம என்னடா பண்ணுறது... அத வச்சி ...................................!!!"

ஞாயிறு, அக்டோபர் 03, 2010

Memoirs of a Geisha

Memoirs of a Geisha

"மகளே, உன் அக்கா, ஒரு மரத்தைப் போல, நங்கூரமாய் ஊண்றிய சக்கூரா மரத்தை போல. அவளால் இருந்த இடத்தை விட்டு வாழ முடியாது. ஆனால், நீ நீரைப் போல. நீர் பாறையைக் கூட கடந்து போகும். தடுக்கப்பட்டாலும் புதிய பாதையை ஏற்படுத்திக் கொள்ளும்." என்று தொடங்குகிறது படம். கதை நாயகியான "ச்சியோ" என்ற ஜப்பானியப் பெண்ணின் பார்வையில் நகர்கிறது. அப்பெண் சின்னப் பெண்ணாக இருக்கும் போது, வறுமையின் காரணமாக அவளின் அக்காவோடு சேர்ந்து "ஒகியோ" என்னும் "கீசா" விடுதிகளில் விற்கப்படுகிறாள். அக்காவிடம் இருந்து பிரிக்கப் படுகிறாள்.

Geisha என்பவர்கள், நமது தேவதாசியைப் போன்றவர்கள். இவர்களது தொழில் நடனமாடுவது, இசைப்பது, இசைபாடுவது மட்டுமே. "கீசா" என்றால், கலைஞர்கள் என்று நேரடியாக பொருள்படும். மிகுந்த அழகும் திறமையும் மிக்கவர்களே கீசாக்களாக முடியும். ஆகையால், சிறு வயது தொடங்கியே பயிற்சி தொடங்கி விடுகிறது. எப்படி நடப்பது, எப்படி உடை அணிவது. எப்படி அமர்வது, எழுவது, பார்ப்பது என்று. வளர்கையில் ஒவ்வொறு பயிற்சிகளாக தேர்ச்சி வைத்து சோதிக்கப் படுகிறார்கள். பின்பு ஒருநாள் "மைக்கோ" என அழைக்கப்படும் அப்ப்ரிசண்ட்-களாக எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டு பின்பு கீசாக்களாக மாறுகிறார்கள். இவர்கள் பின்பு தம் திறமையை வைத்து, களிப்பூட்டி, பொருள் ஈட்டி, தம்மை வளர்த்த ஒகியோக்களுக்கு வருமானம் சேர்க்கிறர்கள். சிறுவயது முதலே பெரும்பாலும் அடிமைகளாகவே நடத்தப்படுவதாக காட்டப்படுகிறது.

இவ்வாறு சிறுமியாக சேர்க்கப்பட்ட "ச்சியோ", தன் தந்தை சொன்னதைப்போலவே நீரோடையாக தன்னை ஐக்கியமாக்கிக் கொள்கிறாள். முதலில் அக்காவைப் பிரிந்தது தாங்க முடியாமல் இருந்தாலும், வந்த வாழ்க்கை பிடிக்காவிட்டாலும், ஏதோ என்று பணிகளை செய்து வருகிறாள். அவளிருந்த ஓகியோவில், அப்போதய கீசா "ஹட்சமமோ"வின் அறிமுகம் கிடைக்கிறது. அந்த கீசாவின் நடவடிக்கைகள் இவளை ஆச்சரியமூட்டுகிறது. கீசாக்கள் பெரும்பாலும் கலை செய்து வந்தாலும், அவளின் அழகுதான் முன்னிலைப் படுத்தப்படுகிறது. ஆகவே, அவர்கள் நினைத்த வாழ்வினை வாழ முடியாது. காதலும் மறுக்கப்படுகிறது. அவளின் செய்கைகளும், குறும்புகளும், ரகசியமான காதலும், "ச்சியோ"வுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஹட்சமமோ செய்யும் குறும்புகளில் பெரும்பாலும் ச்சியோவே மாட்டிக்கொள்கிறாள். ச்சியோவின் அக்காவும், அவளின் தந்தை சொன்னதைப்போல அவளின் சொந்த கிராமத்தை விட்டு, இந்த புதிய இடத்தில் இருக்க முடியவில்லை. அதனால், தப்பிப் போக நினைக்கிறாள். ச்சியோவையும் அழைக்கிறாள். ஒரு இரவு நாள் குறிக்கிறார்கள். ச்சியோ கூரையின் மீதேறி தப்பிப்போக எத்தனிக்கையில் மேலிருந்ந்து கீழே விழுந்து கையினை முறித்துக்கொண்டாள். அவள் அக்கா மட்டும் தப்பி ஓடுகிறாள்.  இதனால், கோபமுற்ற ஓகியோவின் தலைவி, ச்சியோ கீசாவாவதை எதிர்க்கிறாள். அவளின் குரும்புத்தனத்தால் விளைந்த செலவுகளுக்காக அவள் பணியாளகவே இருக்குமாறு பணிக்கிறாள். ச்சியோவின் சமவயது தோழி "பம்ப்கின்"-ன்னையே அடுத்த கீசாவாக்க ஓகியோ முடிவு செய்கிறது.

கவலையே உருவாக நாட்களைக் கடத்திக்கொண்டிருந்த ச்சியோ ஒருநாள் நகரத்தின் பாலத்தில், நகரத்தின் சேர்மேனை சந்திக்கிறாள். சேர்மேன் இவளின் சோகத்தைப் பார்த்துவிட்டு, ஆறுதல் கூறிவிட்டு, ஐஸ்கிரீம் வாங்கித்தருகிறார். இந்த ஒரு நிமிடப்பரிவு, இவளுக்குள் வாழ்க்கையின் மேல் புதிய நம்பிக்கையைத் தருகிறது. கீசாவாக மாறுவதே இந்த நரகத்திலிருந்து விடுதலையின் முதல்படி என்று நினைக்கிறாள். மேலும், என்றாவது ஒருநாள், சேர்மேனுக்கு நெருக்கமாக வேண்டும் என்று காதல் கொள்கிறாள். மேலும், வருடங்கள் நகர்கின்றன. பம்ப்கின் கீசாவாகிறாள். இவள் பணிப்பெண்ணாகவே இருக்கிறாள். ஆனால், அந்த இரவு, இவளின் வாழ்க்கையை புரட்டிப்போடுகிறது. எங்க்கிருந்தோ வந்த ஒருவள் மமெஹா, ஒகியோவின் போட்டி ஓகியோக்காரி, இவளை வாங்க்கிப்போகிறாள். கீசாவக மாற்றுவதாகவும், இவளின் கடன்களை அடைப்பதாகவும் சொல்கிறாள். அவ்வாறே இவளை பயிற்சியின் மூலம் ஆறே மாதத்தில் கீசாவாக மாற்றுகிறாள். ச்சியோ தன் தனித்தன்மையான அறிவைக்கொண்டு ஒரு intellectual-ஆகவும் காட்டிக்கொள்கிறாள். மமெஹா அவளை அந்த நகரத்தின் பணக்காரர்களில் ஒருவன் (நொபு), சேர்மேனுடன் ஃபேக்டரி நடத்துவனுடன் அறிமுகப்படுத்துகிறாள். சேர்மேனுடன் அருகில் இருக்கவே ச்சியோ சம்மதிக்கிறாள். மமெஹா ச்சியோவை நொபுவுக்கு விற்க முனைகிறாள். அவ்வாறு செய்வதே ச்சியோவின் கடன்களை தீர்க்கும் என்று நினைக்கிறாள். அவ்வாறே செய்கிறாள். ச்சியோவ், நகரமே விரும்பும் கீசாவாக மாறுகிறாள். கடன்கள் தீர்நது, பழைய ஓகியோவே அவளை கீசாவாக ஏற்றுக்கொள்கிறது. பம்ப்கின் இதனால் ஏமாற்றமடைகிறாள். ச்சியோ சேர்மேனையே விரும்பினாலும், நொபு-வுடனையே நாட்களை கழிப்பதாக அமைகிறது.

ஒருநாள், எல்லாமே தலைகீழாக மாறுகிறது. அமெரிக்கப் படைகள், ஜப்பானை தாக்குகிறது. எல்லோரும் பிரிகிறார்கள். ச்சியோ சில ஆண்டுகளை மலைகளில் கழிக்கிறாள். உடலை வருத்தி வேலை செய்து வாழ்கிறாள். ஒருநாள் நொபு இவளைத் தேடி வருகிறான். இவளை அழைக்கிறாள். தனது ஃபேக்டரி நொறுங்க்கிப் போனதாகவும், இவளின் உதவி இருந்தால், பழையபடி கீசாவாக மாறினால், ஒரு அமெரிக்க ஜெனரலின் மூலமாக, ஒரு காண்ட்ராக்ட் கிடைக்கும் என மன்றாடுகிறான். சேர்மேன் தன்னொடு இருப்பதாகவும் சொல்கிறான். இவளும் சேர்மேனுக்காக சம்மதிக்கிறாள். பழையபடி நகரத்திற்கு வருகிறாள். நகரமே மாறிப்போயிருக்கிறது. அமெரிக்க படை வீரர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள். மீண்டும் மமெஹாவைச் சந்திக்கிறாள், முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலையில். மீண்டும் கீசாவாக மாறுகிறாள். நொபு தன்னை விரும்புவதாக அறிகிறாள். அவன் தன்னை வெறுக்க செய்யும் ஒரு நாடகத்தில், பம்ப்கின் நாடகமாடி, தன்னை சேர்மேனே வெறுக்கும்படி ஆகிவிடுகிறது. வெறுப்புற்று திரும்ம மலைக்கே திரும்பி விடுகிறாள். நம்பிக்கையற்று காத்திருக்கிறாள்.

சில நாட்கள் கழித்து யாரோ வந்திருப்பதாக தகவல் வருகிறது. நொபுவாகத்தானிருக்கும் என்று வந்தவளுக்கு, சேர்மேன் வந்தது ஆச்சரியமளித்து. தான் பாலத்தில் சந்தித்தை ஞபகப்படுத்தியும், நொபுவுக்காக விட்டுக்கொடுத்ததையும், ஒகியோவில் இருந்ந்து காப்பாற்ற தான்தான் மமெஹாவை அனுப்பியதாகவும், தன் காதலை சேர்மேன் வெளிப்படுத்தினார். மிகுந்த சந்தோசமடந்த ச்சியோ அழுதுகொண்டே தோளில் சாய்ந்தாள். இது ஏதோ ராணியின் கதையல்ல, ஒரு சாதரணமான கீசாவின் குறிப்புகள் என்று சொல்லி படம் முடிவடைகிறது.

கவிதை போன்ற கதையமைப்பு. ஒவ்வொரு காட்சியும், ஓவியம் போன்ற ஒளியமைப்பு. அற்புதமான வசனங்கள். stunning performances. சிறந்த படத்தை பார்த்த திருப்த்தி ஏற்பட்டது. தண்ணீரை ச்சியோவின் ஒரு உருவகமாக இயக்குனர் பயண்படுத்தி இருப்பது சிறப்பாக இருக்கிறது. ஆரம்பம் முத்லே படம் நீரிலே ஆரம்ப்பிக்கிறது. கடும் மழை. ஒவ்வொரு முக்கிய காட்சியிலும் நீர் மவுனமாக வந்து போகிறது. சியோவ் விடுதியில் விற்கப்பட்ட ஆரம்பத்தில், வாளியில் நீர் தளும்புவது, அவளின் மனம் தழும்புவதையும், பின்பு பழக்கப்பட்டு சகஜமாகும் போது, மெதுவாக குளியலரையில் நீர் தரையில் மெதுவாக பரவுவதாக காட்டப்படுக்கிறது. ச்சியோ சேர்மேனை சந்திக்குப்பது நீரோடையின் மேல் அமைகிறது. இவளின் கண்களில் இருக்கும் நீலமான நீர் அந்த ஓகியோவில் விரும்பத்தகாததாக காட்டப்படுவதும், இவளை அங்கிருந்து அழைத்துச்செல்லும் ம்மெஹாவோ அதையே அவளின் பலமாகவும் காட்டுவது பார்ப்பவரின் முரணை சொல்கிறது. மமெஹா சொல்கிறாள், "நீர் மிகவும் வலிமையானது. பூமியை மூழ்கடிக்கும், தீயை அணைக்கும். இரும்பையும் அழிக்கும்". போர் நடக்கும் போது, ச்சியோ மலையில் வாழும்போது, நீரிலே ரத்தம் கசிவது போல, அவளின் நம்பிக்கைகள் கசிவது போல, செந்நிறத்துணிகளை துவைப்பது போல இயக்குனர் பயன்படுத்தி இருக்கிறதாக நான் உணர்கிறேன். கடைசிக்காட்சியும், தெளிந்த குளத்தின் நடுவே சேர்மேனை சந்திப்பதாக அமைகிறது. ஓகியோ நாட்களில் இருள் கலந்த ஒளியமைப்பும், நீல விளக்குகளும், கிளைமாக்ஸ் காட்சி கலர்புல் வண்ணமாகவும் ஜொலிக்கிறது. ஒலி மற்றும் இசையிலே நான் கொஞசம் வீக். இருந்தாலும், படத்தின் இசை மனதில் ஏதோ செய்கிறது. குறிப்பாக, ஓகியோவில் இருந்ந்து ச்சியோ தப்பிக்கும் காட்சி. ச்சியோவுக்கு Yo Yo Ma வின் "செல்லோ" இசைக்கருவியும், சேர்மேனுக்கு வயலினும் பயண்படுத்தப்பட்டிருக்கிறது.

கவர்ந்த வசனங்கள்.
"என்ஜியரிடம் இது எப்படி வேலை செய்கிரதென்று ஒரு போதும் கேட்காதே, ஏனென்றால், அவன் சொல்லிவிடுவான் :-)" - சேர்மேன் ச்சியோவிடம்.
"போர், வணிகம், விளையாட்டு. இந்த மூன்றில் ஏதோவொன்றில் நிபுணத்துவம் பெற்றால் போதும். மற்றவற்றில் பரிணமிக்கலாம்." - நொபு, ச்சியோவிடம்.
"'உருவம் கண்டு எள்ளாதே. சுமோ மல்யுத்தத்தில், உருவத்தில் குறைந்த ஒருவன், பெரியவனையும் வீழ்த்த முடியும்' என்று நீங்கள் சொன்னது புரிகிறது". - ச்சியோ நொபுவிடம்.
"நீ கீசாவாக ஒரு காலத்தில் இருந்தாய். அதிலிருந்து இப்போது, நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட நீண்ட வருடங்களாகிறது" - ச்சியோ ஹட்சமமோவிடம்.
"நான் இப்பொழுது இசையும் நடனமும் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?" - நொபு. "வண்டியை பக்கவாட்டில் நகர்த்த முடியாது" - ச்சியோ.
"நான் உன்னைப் பார்க்கும் முன்னர், மிகுந்த கட்டுப்பாடுடனும் ஒழுக்கத்துடனும் இருந்தேன். நீ அதை கெடுத்து விட்டாய்" - நொபு ச்சியோவிடம்.
"it is against his mighty principles" - நொபுவைப்பற்றி சேர்மேன்
"ஒரு கோயிலில், இழப்பு என்ற தலைப்பில் மூன்றே வார்த்தைகளில் ஒரு கவிதை எழுதப்பட்டு இருந்தது. அந்த மூன்று எழுத்துக்களும் அடித்து மறைக்கப்பட்டிருந்தன. இழப்பை படிக்க முடியாது, உணரத்தான் முடியும்" - ச்சியோ