போனவாரம் "பண்ணார்கெட்டா" ஜூவிற்கு பொடியன் விபுலனைஅழைத்துப் போயிருந்தேன். எனது வீடு, ஜூவிலுருந்து பத்து கி.மீட்டரில் இருந்ததால், ஆ ஊ வென்றால் கிளம்பி விடுவோம். ஊரிலிருந்து யாராவது வந்திருந்தால், அவர்களுக்கு ஜூ கட்டாய தரிசனம் உண்டு. ஆனால், சில மாதங்கள் வெளிநாடு சுற்றித்திரும்பியிருந்ததால், இப்போது அப்போது என்று ப்ராமிஸ் செய்திருந்தபடி, விபுலனை வெளியே அழைத்து போக முடியவில்லை. இந்த வாரம், கொட்டிகெரேவில் சாப்பிடப் போயிருந்தபோது, அப்போது விட்டால் முடியாது என்று மழையைய் பொருட்படுத்தாமல் கூட்டிப் போயிருந்தேன். மாலை ஆறு மணிக்கு குளோஸ் செய்து விடுவார்கள். ஐந்து மணிக்கு போய்ச்சேர்ந்தோம். நுழைவாயிலே தெரியவில்லை, மாற்றம் செய்திருந்தார்கள். நூற்றைம்பது கொடுத்து உள்ளேறினோம். மழையோ மழை. கொடுத்த காசுக்கு வீண் செய்யவேண்டாமென்று, மழையிலேயே சுற்றிப்பார்த்தோம். மழையினாலோ என்னவோ எல்லா மிருகங்களும் சந்தோஷமாய் சுற்றித்திரிந்தன. புதிய அனுபவமாய் அமைந்த்து. விபுலன் எங்களை லீட் செய்தான். பைத்தான் என்ற மலைப்பாம்பின் கூண்டருகே சென்றோம். வழக்கத்துக்கு மாறாக, நான்கு முயலையும் உள்ளே விட்டிருந்தார்கள். கூண்டின் உள்ளே இரண்டு சிறிய ஷெல்டர் இருந்தது. மலைப்பாம்பு உள்ளே நான்கில் ஒரு முயலை வளைத்தபடி ஒரு ஷெல்டரில் சுருண்டிருந்தது. இரண்டு இன்னொரு ஷெல்டரில் சுற்றித்திரிந்தன. மூன்றாவது பாம்பின் அருகில் வெடவெடவென்று நடக்கப்போவதறியாமல் உட்கார்ந்திருந்தது. அப்போது சாவைப்பார்த்தேன். அந்த முயலின் கண்கள் ஆரஞ்சுப்பழமாய் மிண்ணியது. மற்ற முயலின் கண்கள் போலில்லை. பாம்பு தன் தலையை திருப்பி நாக்கை நீட்டிக்கொண்டு முயலை நோக்கி பண்ணிரண்டு அங்குல தொலைவில் குறி பார்த்தது. பாம்பு ஏதோ சொல்ல வந்தது போலவும் முயலுக்கு கேற்காதது போலவும் அதைக்கூர்ந்து கேற்க, முயல் கூர்மையாயிருந்த பாம்பின் தலையருகே நேராய்ப்போனது. ஹிப்னாடிசம்தான். சந்தேகமேயில்லை. நொடியின் பின்ன நேரத்தில், பாம்பு சரேலென்று பாய்ந்து முயலின் தலையைப்பிடித்தது. விபுலன் வீலென்று சந்தோஷத்தில் துள்ளினான். இதற்கு முன்பு ஒரு வேட்டையை அவன் நேரடியாய்ப்பார்த்தில்லை. ஏன், நானே அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை. திரும்பி வீடு வந்து சேரும்வரை, அந்த முட்டாள் முயலின் நினைவு அகலவில்லை. பாம்பின் உணவு முயலாய் அல்லவா இருக்கிறது. மேலும் பாம்பிற்கு ஹிப்நாடிச சக்தி இருக்க்வேண்டும். கராத்தே கிட் படத்தில் பாம்பின் கண்களை உற்றுப்பார்த்து பயிற்சி செய்யும் காட்சிதான் ஞாபகம் வந்தது.
கனக துரை மாமாவிற்கு பாம்புகளைக் கண்டால் பிடிப்பதேயில்லை. அவர் விவசாயம் பார்த்து வந்த மஞ்சள் காட்டில் அவை அடிக்கடி விஜயம் செய்து வந்தன. அவை நகரும் சத்தம் வைத்தே எத்திசையில் அவை இருக்கின்றன என்று ஊகித்து விடுவார். பின்பு சரசரவென அதன் பின் ஓடி எங்காவது மறையும்முன்னே அப்பாம்பின் வாலைப் பிடித்துவிடுவார். மூன்று நான்கு முறை சுழற்றி பனை மரத்தில் ஓங்கி அடித்து விடுவார். நாங்கள் பின்பு அதை கைகளில் தொட்டுப்பார்ப்போம். எடுத்து கழுத்தினில் சுற்றிக்கொள்வோம். கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரை என்று பாம்பின் வகைகளை அவ்வாறே அறிந்து கொள்வோம். பொதுவாக சிலபாம்புகள் துரத்த துரத்த திரும்பி பார்க்காமல் ஓடும். ஆனால், சில சடாரென்று திரும்பி படமெடுத்து ஆடும். லாவகமாக வாலைப் பிடிப்பதிலேதான் சூட்சுமம் இருக்கிறது.
ஒவ்வொரு முறை பொங்கலின் போது, மாடு பிடித்தல் எனும் விழா வருடம் தோறும் ஒருமுறை நிகழும். அதற்கு ஒவ்வொரு ஊரிலும் சலகெத்து (கோவில் மாடு) என்று நேந்து விடுவார்கள். அது எங்காவது மலையிலோ காட்டிலோ போய் மேய்ந்து வரும். ஆனால், பொங்கலின்போது கரெக்டாக வந்துவிடும். காணும் பொங்கலுக்கு பத்து நாட்கள் முன்னதாக ஊர் களை கட்டத் தொடங்கி விடும். ஒவ்வொரு நாளும் மாலை, ஊர் இளவட்டங்கள் கூடி அந்த சலகெத்தை மரிப்பார்கள். ஊர் வட்டமாக நிற்க, இரு நீள கம்புகளுடன் ஒரு இளசு உறுமி தாளத்திற்கு ஏற்ப சலங்கை கட்டி மாட்டின் முன்னே போக்கு காட்டி ஓடுவார்கள். அந்த மாடும், அதற்கேப்ப முட்டுவது போல் போக்கு காட்டும். ஆனால் முட்டாது. அதற்கு ஆபத்து என்று படும்போது, பாய்ந்து வரும். ஆனால், அந்த மாட்டை உடல் மொழியால் கட்டுக்குள் கொண்டுவந்து இசைக்கு தகுந்தாற்போல் சுற்றி சுற்றி வருவார்கள். கிராமத்தின் எல்லா வீட்டிலிருந்தும் ஒரு பொடுசாவது இரண்டு நான்கு முறை விளையாடிவிடுவார்கள்.
பொதுவாக, மாடுகளை அடக்கி கட்டுக்குள் கொண்டுவர மூக்கணாங்கயிற்றை பயண்படுத்துவார்கள். மாட்டின் மூக்கில் கயிற்றை நுழைத்துக் கட்டியிருப்பார்கள். திமிறினால், இக்கயிறை பிடித்து இழுக்கலாம். வலியில், மாடு சொன்ன பேச்சு கேட்கும். இதெல்லாம் தேவையிராது. உடல் மொழியாலே கட்டுப்படுத்தலாம். இந்த கயிறெல்லாம், சலகெத்துக்கு கிடையாது, உடல் மொழியாலும் கொம்பைப் பிடித்தும்தான் கட்டுப்படுத்த வேண்டும்.
வெளியூரிலேயே பள்ளி கல்லூரியில் படித்ததால், மாதமிருமுறையாவது வார இறுதிகளில் வீட்டிற்கு போய்விடுவேன். காமிக்ஸ் கதையில் வரும் ஜேம்ஸ்பாண்டு போல விமானம், கப்பல், ரயில், ஜீப், வைக்கோல் மாட்டு வண்டி என்று சாகசப்பயணம் போலதான் டிராவல் செய்வதுண்டு. தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் கல்லூரி இருப்பதால், மப்சல் வண்டிகள் நிக்காது. பீகாரோ ஜாம்செட்பூரோவிலிருந்து வரும் லாரிகளில் லிப்ட் கேட்டு, கோவை வந்து, டவுன் பஸ்ஸில் ஏறி, நாளைக்கு இரண்டு ஆக்ஸிடெண்டு செய்யும் தனியார் விரைவுப் பேருந்தில் ஏறி, பழனி செல்லும் கூட்டத்தில் தொங்கி, இறங்கி ஐந்து கிலோ மீட்டர் நடந்துதான் தோட்டத்து சாலையை அடைய முடியும். வழக்கம் போல நண்பர்களுக்கு முன்னுரிமை தந்து ஊர் சுற்றிய பின்னரே புறப்படுவதால், ஊர் வந்து சேற 11 மணியாகிவிடும். நடு சாமத்தில், சுடுகாட்டையெல்லாம் தாண்டி, ஊர் எல்லையில் இருக்கும் வீட்டு நாய்களிடமெல்லாம் தப்பித்து, புதர் மண்டிக்கிடக்கும் வரப்புகளில் குருட்டு நம்பிக்கையில் பாம்பை மிதிக்காமல் நடந்து, பேய்கள் தூங்கும் புளிய மரங்கள் கடத்து வீடு வந்து சேரவேண்டும். கரண்ட் செக் செய்ய வரும் செக்கரா என்று ஆராய்ந்த பின்னரே வீட்டைத் திறப்பார்கள். வீட்டு நாய்கள் பரவாயில்லை. வீட்டை நோக்கி வருபவரையோ, அல்லது பயந்து ஓடுபவரையோதான் விடாமல் துரத்தும். பயந்து கொள்ளாத மாதிரி விறைப்பாக அதே சமயம் ஓனர் போல செல்லமாக விரட்ட வேண்டும்.
நகரங்களில் இருக்கும் விலங்குகள்தான் கடித்து விடுகின்றன. பொள்ளாச்சியில் இருந்த போது, விஜயாக்கா மகன், குரங்கிடம் போய் வீரம் காட்டி கடி வாங்கிக்கட்டியதோடு, பட்டப் பெயரும் கட்டிக்கொண்டான். நந்தி ஹில்ஸில் மிரட்டினால், கடிக்க வருகின்றன குரங்குகள். விபுலனின் டிபன் பாக்ஸை கடத்திச் சென்று ஓபன் பண்ணி தின்றன. ஏன் அபார்ட்மெண்டிலேயே, சனிக்கிழமை தோறும், புண்ணிய ஆத்மாக்கள் ஆஞ்சநேயருக்கு பழம் கொடுத்து வளர்க்கிறார்கள். பால்கனி திறந்திருந்தால் ஆஞ்சநேயர் பழங்களை அவரே எடுத்துக்கொள்வார். மேனேஜ்மெண்ட் கமிட்டியில் ரிலீஜியஸ் ப்ரச்சினையாக உருமாறி நிற்கிறது.
நள்ளிரவில் நடந்து வருபவர்களுக்கு தெரியும் தெருநாய்கள். கூட்டமாகத்தான் திரியும். ஒன்றின் பார்வையில் கூட படாமல், இருட்டிலேயே நடத்து எஸ்கேப் ஆகவேண்டும். ஒன்று மட்டும் மோப்பம் பார்த்து பின் தொடர்ந்தால், அனைத்தும் கூடி விடும். குலைக்க ஆரம்பித்தால், ஓடவும் முடியாது. மூன்று மாதத்திற்கு முன் நம் ஜானியின் காலை கார் விட்டு ஒடித்த காரின் ஓனர் இவன்தான் என்று சிலது எண்ணிக்கொண்டு வண்மம் தீர்க்கப் பார்க்கும். அப்பொழுது பார்த்து வீட்டில் போய் சாப்பிடலாம் என்று பார்சல் வாங்கி வந்திருந்தால், நாய்களுக்கு கொடுத்துவிட்டு பட்டினி கிடப்பது மேல்.
நகர மனிதர்களைப் போலவே இவைகளுக்குமான உடல்மொழிதான் புரிபடவே மாட்டேங்குது!
களம்
திங்கள், ஜூன் 24, 2013
புதன், டிசம்பர் 12, 2012
Thuppakki - A mathematical analysis.
In the recently released movie Thuppakki, there comes a scene. It's an awesome movie in fact. But, let see the mathematical problem in this particular scene and let's analyse the solution for that.
The scene goes like this. A member of a sleeping cell escapes captivity and plans to plant bombs at 12 different places using 11 other different members. Immediately after escape, he devices a plan to contact the other 11 members and pass on the information. The protagonist, who wantedly released the terrorist so that he can find out the all 12 members, had to device a plan to eliminate all of them at once. Missing one will lead to bombing and loss of lives.

So instead of going with 12 people, he should have gone with at least 16 people for 100% success. Or the director should have selected 16 places instead :-).
செவ்வாய், செப்டம்பர் 20, 2011
இமைக்கும் நேரமும் நொடிக்கும் அளவும்
தமிழ் அளவைகளின் படி, ஒரு நாள் மற்றும் வருடம் அற்புதமாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய முறைப்படி, ஒரு நாள் 24 ஆக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மணிநேரமும் 60 ஆக பிரிக்கப்படுகிறது (விநாடி). பின்பு ஒவ்வொரு விநாடியும் மேலும் 60 ஆல் பகுக்கப்பட்டு நொடி என்று வழங்கப்படுகிறது. இந்த நொடி என்பது தமிழ் அளவைகளின் படி தவறாகும்.
தமிழ் அளவைகளின்படி, ஒரு நாள் 60 ஆல் பகுக்கப்பட்டு 1 நாழிகை என வழங்கப்படுகிறது. பின்பு 1 நாழிகை 60 ஆக பிரிக்கப்பட்டு, 1 விநாடி எனவும், 1 விநாடி 24 ஆல் வகுபட்டு 1 உயிர் ஆகிறது.
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி - நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3 3/4 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் (30 நாள்) = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் (12 மாதம்) = 1 ஆண்டு
12 ஆண்டு = 1 மாமாங்கம்
5 மாமாங்கம் = 1 வட்டம்
இதன்படி ஒரு முறை நொடிக்கும் அளவு 1/4 of a second-ம் ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் 1/16 of a second ஆகவும் வருகிறது. அதாவது, ஒரு செகண்ட்க்கு, 16 முறை கண்ணிமைக்க முடியும் போல தெரிகிறது. அறிவியல் ஆய்வின் படி, ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் 300 millisecons i.e. ~1/3 of a second. இதில் யார் சரி என்று சொல்வது?

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
இருபடிச் சமன்பாடுகள்
எதற்காக இருபடிச் சமன்பாடுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
இந்த இயற்கையில் உள்ள சில நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள மணிதனுக்கு ஆசை இருந்தது. அதைப்பற்றி ஆராயும் பொழுது, ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதாக இருந்தது. அப்படியென்றால், எவ்வாறான தொடர்பு? இதை வரையறுக்க, அதை குறியீடுகளாக இருந்தால் பரவாயில்லை என்று நினைத்தான். ஆகையால், மாறிகளையும் மாறிலிகளையும் (variables and constants) அறிமுகப்படுத்தினான். காலத்துக்கும், வேகத்துக்கும் என்ன தொடர்பு. வேகம் அதிகரித்தால், கடக்கக்கூடிய காலம் குறையும். ஆகையால், எதிர்மறைத் தொடர்பு. s = d/t (s - speed, d - distance, t - time). இந்த சமன்பாடு, மூன்று மாறிகளைக்கொண்டது.
சரி, இருபடிச் சமன்பாடுகள்? சிலசமயம், மாறிகள் வெறும் எளிய தொடர்பாக இருப்பதில்லை. அவற்றின் வர்க்கங்களாகவோ, கணங்களாகவோ இருக்கும். உதாரணமாக, ஒரு கல்லை மேல் நோக்கி விட்டெறிந்தால், அது என்ன வேகத்தில் மேலே போகும், என்ன வேகத்தில் கீழே வரும், என்ன பாதையில் போகும்? மேலே சென்று எந்த புள்ளியில் கீழ் நோக்கி திரும்பும்? அது கீழே வீசப்பட்ட இடத்திற்கு எப்போது வந்து சேரும்? எந்த பொருளை மேலே வீசினாலும், அது ஒரு பேரபோலா என்ற ஒரு வளைவாக போகும். அதாவது மேல் நோக்கி வளைந்த ஒரு வில் போல. பேரபோலாக்களை இருபடிச் சமன்பாடுகளாகத்தான் குறிக்க முடியும்.
உதாரணமாக,
h = ut - dt^2
h - உயரம்
u - மேல்நோக்கிய வேகம்
d - கீழ் வரும்போது முடுக்கம் (acceleration). என்ன வேகத்தில் வேகமடைகிறது. இங்கு புவியீர்ப்பு விசை. (gravity)
t - நேரம்.
மேல் நோக்கிய வேகமும், கீழ்நோக்கிய முடுக்கமும் மாறிலிகள் அல்லது முதலிலேயே தெரியும் என்று வைத்துக்கொள்வோம். அதாவது, u = 30.2 ms^-1, d = 9.8 ms^-2.
h = 30.2 t - 9.8 t^2
சரி, அப்படியென்றால், இங்கு நாம் கண்டுபிடிக்க வேண்டியது, மேலே வீசிய கல் எப்போது கீழே வரும். மேலே வீசப்படும் போதும், கீழே வந்து தரையை தொடும்போதும், உயரம் ௦ அல்லவா? (சரி, ஒரு ஆள், ஆளுயர குழிக்குள் இருந்து வீசுவதாக வைச்சுக்கோங்க :-)). அப்படியென்றால்
30.2 t - 9.2 t^2 = 0
இது ஒரு தெரிந்த இருபடிச்சமன்பாடு அல்லவா? இது போன்ற வடிவிலுள்ள சமன்பாடுகளை எப்படி தீர்ப்பது எண்பதைத்தான் கணிதம் வரையறுத்துள்ளது. அதன் ஃபார்முலாவை போட்டால், t கிடைத்து விடப்போகிறது. அதாவது t = (௦, 6.16). கல் கீழே தரையைத் தொட ஆறு நொடிகள் ஆகும். அவ்வளவுதான்.
கணிதம் இங்கிருந்து தனியாக பிரிந்து, சரி, t பதிலாக x -யை போடு. இந்த சமன்பாடுகளை எந்த எந்த வகையில் தீர்க்கலாம். எவ்வளவு வேகமாக தீர்க்கலாம். x பற்றி வேறு ஏதேனும் தெரிந்தால், விரைவாக முடிக்க முடியுமா? என்று generalize பண்ண ஆரம்பிக்கும். அதுதான் கணிதம். மேலே சொன்னது கணித்தத்தின் பயன்பாட்டின் ஒரு மாதிரி.
இதற்கு பின்னூட்டமாக போட்டது.

திங்கள், நவம்பர் 15, 2010
பெங்களூரு புத்தக கண்காட்சி - 2010
பெங்களூரில் இன்று புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஏதாவது ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிவரலாம் என்றுதானிருந்தேன். 200 ரூபாய்தான் பட்ஜெட். ஆனால் கிட்டத்தட்ட 1500 அழுதுவிட்டுதான் வரவேண்டியிருந்தது.
எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கோ இல்லையோ, புத்தகம் வாங்கும் பழக்கம் இருக்கிறது. சுஜாதா போல எழுத்தாளராக இருந்தால், இதைப்படி அதைப்படி என்று இனாமாகவேனும் புத்தகங்கள் தேடிவரும். நான் என்ன செய்ய, சொந்தக்காசில்தான் வாங்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு "தீம்"-ல் புத்தகங்கள் வாங்கிக் குவிப்பேன். ஆரம்ப காலங்களில் கணிப்பொறி programming புத்தகங்கள். இப்பொழுது அதற்கு வேறு source இருப்பதனால், அது வாங்கத்தேவையில்லை. சென்ற முறை general computers and must have books for a software professionals வாங்கிக்குவித்தேன். தற்பொழுது கொஞ்சம் யோகா, ஆன்மீகம், சுயநோக்கு மற்றும் மாற்று வைத்திய முறைகள் என்று ஒரு ஆர்வம் வந்திருப்பதனால், அந்த புத்தகங்களே அதிகம் வாங்கினேன். அவற்றின் பட்டியல் பின் இணைத்துள்ளேன். தமிழ் புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். ஆங்கில புத்தகங்கள் எதிலும் இப்பொழுது ஆர்வமில்லை. பொதுவாக அவை how to attain simple goals என்கிற முறையிலேயே உள்ளன. முழுமையான வாழ்வைப் புரியவைப்பதில்லை. அவை மனதோடு ஒட்டுவதுமில்லை. ஆனால் technical books-களில் அவைகளை அடித்துப்போட வேறு கிடையாது.
தியானமும் யோகாவும் ஆன்மீகமாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கைக்கும் உதவுவதால், அதை முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம் என்று விழைந்தேன். சிறுவயதில் பழகிய வேதாத்ரி மகரிஷியில் தொடங்கினேன். சிறிது சிவானந்தா, ஸ்ரி ஸ்ரி, வெளி நாடு, பவுத்தம், ஜென் என்று அலைந்தேன். இவை எல்லாவற்றையும் விட சித்தர்களின் methods தான் கொஞ்சம் ஒட்டுவதாக தெரிந்தது. பெரியாரையும் கொஞ்சம் படித்திருந்ததால் எல்லாம் கொஞ்சம் குழப்பமாகவே தெரிந்தது. பவுத்தம் பரவாயில்லை. சித்தர்கள் கொஞ்சம் பகுத்தறிவுக்குப் பக்கத்தில் இருந்ததாக பட்டது. மற்ற நிறையவற்றில் மூடநம்பிக்கைள் மலிந்திருந்ததாக எண்ணினேன். பயணம் தொடர்கிறது. பார்ப்போம்.
இந்த முறை வாங்கிய புத்தகங்கள்
1. சத்குரு. ஞானத்தின் ப்ரம்மாண்டம்.
சத்குருவின் உரையாடல் மூலமாக பல கருத்துக்களின் விளக்கங்கள். பொதுவாக ப்ராமணர் அல்லாத குருக்களின் வழி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று வாங்கினேன்.
2. ஒரு வினாடி புத்தர் (சத்குரு)
அப்பப்போ வாழ்க்கை போரடித்து விடுகிறது. அப்போது, இம்மாதிரியான கட்டுரைகளை படிக்கும்போது மறுபடியும் ஒரு பிடிப்பு வருகிறது. வாழ்க்கையை திரும்பிப் பார்க்கவும் சரியாக பார்க்கவும் பயன்படுகிறது.
3. விவசாயி - நமது வளர்ப்புத்தாய்
விவசாய குடும்பமாக இருந்தாலும், செய்முறையாக செய்ததில்லை. என் தந்தையின் காலத்தோடு இத்தொழிலில் ஈடுபடுதல் முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால், புத்தக அறிவையாவ தெரிந்துகொள்ளலாம் என்று ஒரு எண்ணம். பின்னால் எப்போவாவது பார்ப்போம்.
4. தாத்தா சொன்ன கதைகள் (கி. ரா)
5. கி. ரா பக்கங்கள்
கி. ராவின் எல்லா புத்தகங்களையும் படித்து விடுவதாக ஒரு உத்தேசம். அற்புதமான எழுத்து. பொதுவாக கிராமங்களைப் பற்றியும், ரொம்ப சுலபமான நடையில் எழுவதாலேயும், இலகுவான வழிமுறைகளில் வாழ்க்கையை அணுகுவதாலேயும் பிடித்திருக்கிறது.
6. புதிய காலம் - ஜெயமோகன்.
சமகால இலக்கியங்களின் ஒரு மதிப்பீடு. பொதுவாக நாவல்களிலும், இலக்கியங்களிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாத போதிலும், இதில் என்ன கிடைத்துவிட போகிறது என்று ஒரு ஆர்வமுண்டு. இவ்வாறான மதிப்பீடுகளை படித்து விட்டால், இவ்வாறான படைப்புகளை நாம் படிக்கும்போது நமக்கு எப்படி தோன்றுகிறது என்று ஒப்பிட்டுப் பார்த்துவிடலாம். முக்கியமாக, காவல்கோட்டம் பற்றிய கட்டுரைக்காக வாங்கினேன்.
7. நலம் - சில விவாதங்கள். - ஜெயமோகன்.
மாற்று மருத்துவ முறைகளை பற்றி சில கருத்தாடல்கள். பொதுவாக, வாழ்க்கையின் எல்லா பிரச்சனைகளுக்கும், எளிதான தீர்வுகள் எப்போதும் இருப்பதாக என் எண்ணம். ஆயுர்வேதம் அவ்வாறான ஒரு தீர்வு. சரியான காலத்தில் சிறிதாக கவனம் எடுத்துக்கொண்டால் பெரிதான தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டாம். என்ன புதிய தகவல் கிடைக்கும் என்று பார்ப்போம்.
8. சித்தர் பாடல்கள் தொகுப்பு
எல்லா யோக முறைகளும் ஒன்றுக்கொன்று பெரிய வித்யாசமில்லை போல தோன்றுகிறது. பதஞ்சலியிலிருந்துதான் வந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வழிகளில் தெரிந்து, குருவின் மேல் சந்தேகப்பட்டு குழம்புவதைவிட, மூலத்தையே தெரிந்துகொண்டால்தான் என்ன. ஆனால், எனக்கு வடமொழியில் அவ்வளவாக ஈடுபாடில்லை. சித்தர்களே அருமையாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு reference-க்காக வாங்கி வைத்துள்ளேன்.
9. திருமந்திரம் - திருமூலர். உரை - ஞா. மாணிக்கவாசகன்.
அற்புதமான நூல். இதைப் படித்தாலே போதும். எல்லா யோக முறைகளும் அடங்கியிருப்பதாக எண்ணுகிறேன்.
10. காற்றே கடவுள் என்னும் சாகாக்கலை - தம்மண்ண செட்டியார்.
கடசியாக பார்த்தேன். வாங்கலாமா வேண்டாமா என்று கூட யோசித்தேன். எல்லா சித்தர்களின் சாராம்சங்களையும் குறுந்தகடு போல சொல்லியிருந்தார்.
11. ஜென்னும். ஜென் தியானமும்
12. ஓஷோவின் புத்தரின் வழி - தம்ம பதம்
எல்லா நல்ல புத்த நூல்களையும் வாசித்துப் பார்க்க ஆவல். ஆனால், எதுவும் நல்ல தமிழ் நடையில் இல்லை. புரிந்துகொள்ள சிரமமாக உள்ளது. மேலும், புத்தரின் வழியையும், அதை அணுக படிக்கவேண்டிய நூல்களையும் யாராவது விளக்கினால் பரவாயில்லை. இப்புத்தகங்கள் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. ஒரு பாகம் மட்டும் வாங்கினேன். நன்றாக இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம்.

வியாழன், அக்டோபர் 07, 2010
ரம்மியமான ஒரு காலை
ஈரமான காலை. ஆழ் அமைதி. உயரமான அலுவலக கட்டடத்தின் உச்சியில் ஒரு வெள்ளை வல்லூறின் அகவல். புதிதாக இருந்தது.

நேற்று இரவு முழுதும் பெய்த பலத்த மழையில் ஒதுங்க இடமின்றி, எங்கள் அலுவலக வாசற்படியில் மிதியடியில் சுகமாக உறங்கிக்கொண்டிருந்த அழகான நாய்க்குட்டிகள். ஒன்று வெள்ளை நிறம். இன்னொன்று கருமை.
வித்தியாசமான ரம்மியமான இனிய காலை இன்று விடிந்தது!

செவ்வாய், அக்டோபர் 05, 2010
மாஸ்கோவின் காவிரியில் ஒரு வசனம்
"நிறுத்துங்க.. நிறுத்துங்க...அவரையும் ஏத்திக்கலாம்". டேக்சியில் ஒரு பெரியவரை இரு இளைஞர்கள் ஏற்றிக்கொள்கின்றனர்.
"ஏண்டாப்பா என்ன படிக்கிற?"
"தாத்தா.. நான் படிச்சு முடிச்சிட்டேன். engineer"
"அப்படியா... நல்லது... இந்த ஊர்ல ஒரு குளம் கட்டு... கால் கழுவ கூட தண்ணி இல்ல.. வெளியூர்ல இருந்துதான் கொண்டு வர வேண்டியிருக்கு"
"தாத்தா.. அது என்னால முடியாது... "
"அப்ப எதுக்குப்பா இந்த engineer வேல?"
"நாங்கல்லாம் foreign company-ல வேலை பாக்குறோம்"
"அப்ப அது நமக்கு ஒதவாத வேலையா?"
"இல்ல தாத்தா.. அவரு மாசம் லச்சக் கணக்குல சம்பளம் வாங்குறாரு"
கோபமாக "தண்ணி இல்லாம என்னடா பண்ணுறது... அத வச்சி ...................................!!!"

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)