உன்னோடு
இன்று முதல் பேசுவதில்லை
உன்னைப்பற்றி
நினைப்பதில்லை
மறந்தும் உன் முகத்தை
நினைப்பதில்லை என்று எண்ணிக்கொள்வேன்.
பேருந்தில் யாரோ உன் பெயர்
சொல்லி அழைப்பார்கள்!
தினமும் செல்லும் சாலையாக இருக்கும்
உன் பெயர் கொண்ட விளம்பரம்
புதிதாய் முளைத்திருக்கும்!
தொலைக்காட்சியில்
உன் பெயரில் ஒருத்தி கதைத்துக்கொண்டிருப்பாள்!
புத்தகத்தை திறந்தால்
நீ எழுதின பெயர் வந்து ஞாபகப் படுத்தும்!
எப்பொழுது என்னை
தொலைபேசியில் அழைப்பாயோ என்று மனம் காத்துக்கிடக்கும்.