கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், அக்டோபர் 12, 2006

ஊடல்

உன்னோடு
இன்று முதல் பேசுவதில்லை

உன்னைப்பற்றி
நினைப்பதில்லை

மறந்தும் உன் முகத்தை
நினைப்பதில்லை என்று எண்ணிக்கொள்வேன்.

பேருந்தில் யாரோ உன் பெயர்
சொல்லி அழைப்பார்கள்!

தினமும் செல்லும் சாலையாக இருக்கும்
உன் பெயர் கொண்ட விளம்பரம்
புதிதாய் முளைத்திருக்கும்!

தொலைக்காட்சியில்
உன் பெயரில் ஒருத்தி கதைத்துக்கொண்டிருப்பாள்!

புத்தகத்தை திறந்தால்
நீ எழுதின பெயர் வந்து ஞாபகப் படுத்தும்!

எப்பொழுது என்னை
தொலைபேசியில் அழைப்பாயோ என்று மனம் காத்துக்கிடக்கும்.

வெள்ளி, செப்டம்பர் 10, 2004

உன்னைக் காணும் வரை...

எனக்கு தோல்வி பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
தோல்வி மட்டுமே பிடித்திருக்கிறது
போட்டியிடுவது உன்னிடம் என்றால்...!

எனக்கு கண்ணீர் பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
கண்ணீர் மட்டுமே பிடித்திருக்கிறது
அழுவது உன்னெஞ்சில்் என்றால்...!

எனக்கு கவிதை பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
கவிதையும் பிடித்திருக்கிறது
எழுதுவது உன்னைப் பற்றி என்றால்...!

எனக்கு பொய் சொல்ல பிடித்ததேயில்லை
உன்னைக் காணும் வரை!
ஆனால் இப்பொழுதோ
பொய்யும் கூட பிடித்திருக்கிறது
சொல்வது உனக்காக என்றால்...!

புதன், ஜூலை 14, 2004

தொடர்பூ

பறிக்கப் பறிக்கப்
பூக்கிறது
என்னவளின் புன்னகை!